மணப்பாறை: சாலை விபத்து.. பைக்கில் கணவனுடன் சென்ற மனைவி பலி

மணப்பாறை அருகே உள்ள சித்திரைபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கோபி இவர் தனது மனைவி தனம் என்பவரை அழைத்துக் கொண்டு இரு சக்கர வாகனத்தில் மணப்பாறையில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் கடந்த இரண்டாம் தேதி அன்று சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் இருந்த வேகத்தடையில் இருசக்கர வாகனம் ஏறி இறங்கிய போது வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த தனம் தடுமாறி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார். பின்னர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய நிலையில் மறுபடியும் தனத்திற்கு உடல்நிலை மோசமானது. 

இதைத்தொடர்ந்து அவரை மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து மருத்துவர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளார். இது குறித்து மணப்பாறை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி