மணப்பாறை அருகே கருங்குளத்தைச் சேர்ந்த பழ வியாபாரி அருள் ஜெனிபர், தனது கணவருடன் பொங்கல் பரிசுத் தொகையான 3000 ரூபாயை யார் வாங்குவது என்பதில் ஏற்பட்ட வாக்குவாதத்தால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.