மணப்பாறை: அரசு பள்ளிகளுக்கு நாப்கின் எரியூட்டும் இயந்திரம்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் GHCL பவுண்டேஷன் (தியாகேசர் ஆலை) சார்பில் இன்று (16/02/2026) நாடாளுமன்ற உறுப்பினர் ராஜாத்தி சல்மா முன்னிலையில், மணப்பாறை சுற்றுவட்டாரத்தில் உள்ள 14 அரசு பள்ளிகளுக்கு சானிட்டரி நாப்கின் எரியூட்டும் இயந்திரங்களும், மணப்பாறை பொது சுகாதாரத்துறைக்கு ரூ4.5 லட்சம் மதிப்பிலான மருத்துவப் பயன்பாட்டு உபகரணங்களும் தியாகேசர் ஆலை மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன. GHCL பவுண்டேஷனில் இருந்து சுஜின் வெங்கடாசலம், பள்ளி தலைமையாசிரியர் லதா, வட்டார மருத்துவ அலுவலர் கிரிஷ் குமார் உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி