மணப்பாறை: கிணற்றில் விழுந்த 2காளைகள் உயிருடன் மீட்பு

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அடுத்த பழைய பாளையத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில், ஆலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நல்லு என்பவரின் காளை மாடும், மதுரை மாவட்டம் குமுட்ராம்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் காளை மாடும் உரிமையாளர்கள் துரத்திப் பிடிக்க முயன்றபோது கிணற்றில் தவறி விழுந்தன. ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயணைப்புத் துறையினர் இரண்டு காளைகளையும் உயிருடன் மீட்டனர். இந்த போட்டியில் 815க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன.

தொடர்புடைய செய்தி