மணச்சநல்லூர்: தனது மருத்துவமனையில் இலவச சிகிச்சை கதிரவன்

மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட திருத்தலையூர், டி. புதுப்பட்டி, வெளியனூர், கரட்டாம்பட்டி, மண்பாறை உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் திமுக வேட்பாளர் கதிரவன் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரை பொதுமக்கள், இளைஞர்கள், இளம்பெண்கள் என அனைத்து தரப்பினரும் திரண்டு நின்று உற்சாக வரவேற்பு அளித்தனர். எந்த ஊராட்சி என்றும் பாகுபாடு இல்லாமல் அனைத்து ஊராட்சிகளுக்கும் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தையும் தொகுதி மேம்பாட்டு நிதியிலும் எனது சொந்த நிதியிலும் நிறைவேற்றி தந்துள்ளேன் என்றும், தனலட்சுமி சீனிவாசன் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனைத்து வகையான சிகிச்சைகளும் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் பேசினார்.

தொடர்புடைய செய்தி