திருச்சி மாவட்டம் வையம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முகவனூர் கிராமத்தில், அரசின் அனுமதியின்றி அரசு மதுபானத்தை விற்ற ரத்தினம் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 27 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர், மணப்பாறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.