துறையூர் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல்

துறையூர் திருச்சி சாலை மற்றும் ஆஸ்பத்திரி ரோடு சந்திப்பில் இன்று காலை (6. 2. 26) கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி பேருந்துகள் மற்றும் அலுவலகம் செல்வோர் வருகையால் வாகனப் பெருக்கம் அதிகரித்து, நெரிசல் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த நேரங்களில் கூடுதல் போக்குவரத்து காவலர்களை நியமித்து போக்குவரத்தைச் சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி