திருச்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்

முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் (09.02.2026) திங்கட்கிழமை காலை அரசு விழாவில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு உணவுத் திட்டம் விரிவாக்கத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், தூய்மைப் பணியாளர்களுக்கான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாநகராட்சி ஐந்தாவது மண்டலத்தில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு மேயர் அன்பழகன் மற்றும் ஆணையர் மதுபாலன் ஆகியோர் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவு வழங்கி அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர்.

தொடர்புடைய செய்தி