மணப்பாறை சிப்காட் தொழிற்பேட்டையில் தீ விபத்து

மணப்பாறை பெரியபட்டி சிப்காட் வளாகத்தில் உள்ள ஜமீல் இரும்பு உருக்கு ஆலையில் கட்டுமானப் பணியின்போது, ஹைட்ராலிக் உராய்வு காரணமாக நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. மணப்பாறை தீயணைப்புத் துறை வீரர்கள் விரைந்து வந்து, சிறிது நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்து குறித்து மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி