மணப்பாறை: மகனை கொலை செய்த தந்தை கைது

திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த அ. கலிங்கப்பட்டி சேர்ந்தவர் கந்தசாமி வயது 78 இவரது மனைவி பொன்னம்மாள் மற்றும் அவரது மகன்கள் அண்ணாதுரை வயது 55, சின்னச்சாமி வயது 53 ஆகிய இரண்டு மகன்கள் உள்ள நிலையில் கந்தசாமி வைத்திருந்த சொத்துக்களை இரண்டு மகன்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டு அவரது வீட்டின் பின்புறம் உள்ள சிறிய ஹாஸ்பிடலிடத் தாழ்வாரத்தில் தங்கியுள்ள நிலையில் மகன்கள் இருவரும் தந்தை கந்தசாமிக்கு உணவு மற்றும் செலவுக்கு பணம் தராத நிலையில் பலமுறை கேட்டும் கிடைக்காத நிலையில் அதிலும் நேற்று முன்தினம் பெரிய மகன் அண்ணாதுரை குலதெய்வம் ஆண்டவர் கோயிலில் கிடா வெட்டி பூசை செய்ததாகவும் தந்தை கந்தசாமிக்கு கோயிலில் உள்ள சாப்பாடு வழங்கவில்லை.

 இதனால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி நேற்று இரவு வீட்டின் முன் பகுதியில் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த அண்ணாதுரையை மறைத்து வைத்திருந்த அரிவாளால் கழுத்து மற்றும் கைகளில் வெட்டி உள்ளார். பலத்த காயம் ஏற்பட்ட அண்ணாதுரை இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மணப்பாறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அண்ணாதுரையின் உடலை கைப்பற்றி உடல் கூறு ஆய்வுக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு கந்தசாமியை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி