லால்குடி அருகே தனியாக வசித்து வந்த மூதாட்டி சடலமாக மீட்பு

லால்குடி அருகே உள்ள இ. வெள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி லட்சுமி வயது 70 அப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடப்பதாக கிராம நிர்வாக அதிகாரி ராஜா அளித்த புகாரின் பேரில் லால்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது சீலிங் ஃபேன் மூதாட்டி லட்சுமியின் தலையில் விழுந்ததால் காயம் அடைந்து அவர் உயிரிழந்தது கண்டறியப்பட்டது. இதைத் தொடர்ந்து மூதாட்டி உடலை லால்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார் சம்பவம் எப்போது நடந்தது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி