மணப்பாறையில் மன உளைச்சலில் மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே இனாம் ரெட்டியப்பட்டி புதூரைச் சேர்ந்த 75 வயதான தும்மாயி அம்மாள், கணவர் இறந்து 15 ஆண்டுகள் ஆன நிலையில், குடும்பப் பிரச்சினைகளால் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட அவரை, வையம்பட்டி போலீசார் உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி