மணப்பாறை அருகே ராமரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த 65 வயது முதியவர் ராமர், நேற்று (பிப்.10) காலை திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் கல்பட்டி பகுதியில் சாலையைக் கடக்க முயன்றபோது, அடையாளம் தெரியாத கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வையம்பட்டி போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, அடையாளம் தெரியாத கார் ஓட்டுநர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.