மணப்பாறை அருகே கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் சுரேந்தர். அம்மாபேட்டை உள்ள ஜே.ஜே. கல்லூரியில் மூன்றாம் ஆண்டு டி.எம்.இ படித்து வருகிறார். கல்லூரியில் நன்றாக படிக்க முடியாததால் கவலையும் மனஉளைச்சலிலும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவம் நடந்த நேற்று (பிப்.3) அவரது தாய் தந்தை இருவரும் விவசாய வேலைக்காக வயலுக்குச் சென்ற போது வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற மணப்பாறை போலீசார் சுரேந்தரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி