திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலைப்பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில், வருகின்ற 28.05.2026 முதல் 30.05.2026 வரை காலை 7.30 முதல் மாலை 5.30 வரையிலும், மாலை 7.00 முதல் இரவு 10.00 மணி வரையிலும் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சி நடைபெறும் சமயத்தில், பயிற்சி தளத்தில் கால்நடைகள் மேய்ச்சலுக்கோ அல்லது மனித நடமாட்டத்திற்கோ அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் சரவணன் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு பொதுமக்கள் நலன் கருதி பிறப்பிக்கப்பட்டுள்ளது.