உப்பிலியபுரம் பீடிஓ பணியிடை நீக்கம் கலெக்டர் அதிரடி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே தளுகை ஊராட்சியில் கட்டப்பட்ட 100 சமத்துவ வீடுகள் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக கூறி அப்பகுதி மக்கள் உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது பொதுமக்களை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார் தரக்குறைவாக பேசியதாகவும், விசாரணைக்கு சென்ற அதிகாரிகளுக்கு ஒத்துழைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. புகாரின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் சரவணன், பிடிஓ செந்தில்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி