திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று, 25ஆம் தேதி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சரவணன் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனங்களை வழங்கினார். இந்த நிகழ்வில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.