தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவரை அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன் மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரவேற்றனர்.