திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே பிராங்கிளின் என்பவர் நடத்தி வந்த மொபைல் கடையில் நேற்று (சனிக்கிழமை) இரவு பூட்டை உடைத்து ₹7.50 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் திருடப்பட்டுள்ளன. இதுகுறித்து மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.