திருச்சி விடுதியில் சீட்டு விளையாடிய 6 பேர் கைது

திருச்சி திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு விடுதியில் ஸ்ரீரங்கம் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பணம் வைத்து சூதாடிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூபாய் 22,150 ரொக்கம் மற்றும் மூன்று இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் ஜீயபுரம், லால்குடி, டோல்கேட் மற்றும் காட்டூர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

தொடர்புடைய செய்தி