திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள போசம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்கள், தலைமை ஆசிரியர் சற்குணன் தலைமையில், வந்தே மாதரம் பாடலின் 150ஆவது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் 150 என்ற எண்ணில் அமர்ந்து பாடலைப் பாடி, ஒற்றுமைக்கான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வு மாணவர்களிடையே தேசப்பற்றையும் ஒற்றுமையையும் வலியுறுத்தியது.