துவரங்குறிச்சி அடுத்த மணியங்குறிச்சி அருகே உள்ள காட்டுப்பட்டியில் சிவமணி என்பவருக்கு சொந்தமான வயல் உள்ளது. இந்த வயலுக்கு நேற்று (ஜூலை 30) காலை சிவமணி சென்றார். அப்போது வயலில் இரை தேடி பன்னிரண்டு அடி நீளமுள்ள மலைப்பாம்பு உறங்கி வந்தது. இதைப் பார்த்த சிவமணி துவரங்குறிச்சி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து மலைப்பாம்பை பிடித்தனர். பின்னர் மலைப்பாம்பு வனப்பகுதிக்குள் கொண்டு செல்லப்பட்டது.