திருச்சி பீம நகர் மார்சிங் பேட்டை காவலர் குடியிருப்பு பகுதியில் இன்று காலை தாமரைச்செல்வன் என்ற இளைஞர் சாலையோரம் நடந்து சென்றபோது, ஐந்து பேர் கொண்ட கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் அவரைத் தாக்கியது. தப்பிக்க முயன்ற தாமரைச்செல்வன் காவலர் குடியிருப்பில் புகுந்தபோதும், கும்பல் அவரை விடாமல் துரத்தி, அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.