காரை ரகுப்பாஷா ஓட்டி வந்த நிலையில் கார் புலிவலம் வனப்பகுதி அருகே சென்று கொண்டிருந்த பொழுது முன்னால் சென்ற அரசு பேருந்தை முந்த முயன்றது. அப்போது எதிரே வந்த தனியார் பேருந்து மீது எதிர்பாராத விதமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரின் முன் பகுதி அப்படியே நொறுங்கியது. இந்த விபத்தில் ரகுப்பாஷாவின் மனைவி ரெஜியாபேகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த ரகுப்பாஷா அவரது தாய் ஹைருண்நிஷா, தங்கை பஷீலா, மகன் ஆலம், தங்கையின் பெண் குழந்தை ஆதிபா ஆகிய ஐந்து பேரும் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த புலிவலம் போலீசார் உயிரிழந்த ரெஜியாபேகத்தின் உடலை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் காயம் அடைந்த ஐவரும் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் போக்குவரத்தை சரிசெய்த புலிவலம் போலீசார் விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.