திருச்சி திருவரங்கம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக, திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட மத்திய சிறைச்சாலை, கேகே நகர், அம்மா மண்டபம், அரியமங்கலம் உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை மே 22ஆம் தேதி ஒரு நாள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என ஆணையர் மதுபாலன் தெரிவித்துள்ளார். மே 23ஆம் தேதி முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.