திருச்சி அருகே கார் மோதி வாட்ச்மேன் பலி

புதுக்கோட்டை மாவட்டம் வாட்டத்தூரை சேர்ந்தவர் சிங்கராயர் குன்னத்தூர் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் பகுதியில் வாட்ச்மேனராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் (டிசம்பர் 31) இரவு எட்டு முப்பது மணி அளவில் சிங்கராயர் வீட்டிற்கு செல்வதற்காக திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் நாகமங்கலம் பகுதியில் சாலை கடக்க முயற்சித்தார். 

அப்போது மதுரை சேர்ந்த முருகேசன் என்பவர் ஓட்டி வந்த கார் சிங்கராயர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயம் அடைந்தவர் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தார். இந்த விபத்து சம்பவம் குறித்து மணிகண்டம் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி