திருச்சி மாவட்டம் துறையூர் அருகே வைரிச்செட்டிபாளையம் கிராமத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் குத்துவிளக்கு ஏற்றி இந்த முகாமை தொடங்கி வைத்தார். கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் மருத்துவ காப்பீடு அடையாள அட்டை வழங்கப்பட்டது.