முசிறி: பசுமாடு திருடிய இரண்டு பேர் கைது

முசிறி அருகே உள்ள அழகாபட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். சம்பவம் நடந்த கடந்த 9ஆம் தேதி அன்று இரவு தூங்கச் சென்றவர், மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது அவரது பட்டியில் கட்டிவைக்கப்பட்டிருந்த பசுமாடு காணாமல் போனது தெரியவந்தது. 

இதுகுறித்து அவர் முசிறி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், அவரது மாட்டைத் திருடிய அழகாபட்டியைச் சேர்ந்த ரங்கநாதன், சிட்டிலரை கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி