திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி ரைஸ் மில் தெருவில் புத்தாநத்தத்தைச் சேர்ந்த ஜம்புலிங்கம் என்பவர் பேக்கரி கடை நடத்தி வருகிறார் சம்பவம் நடந்த நேற்று இவரது கடைக்கு வந்த நெல்லிப்பட்டியை சேர்ந்த மணிகண்டன் துவரங்குறிச்சியை சேர்ந்த வடிவேல் ஆகிய இருவரும் டீ குடிக்க வந்திருந்தனர் கடையை சுத்தப்படுத்தும் பணியில் ஜம்புலிங்கம் ஈடுபட்டிருந்தபோது அவர் வைத்திருந்த இரண்டு ஸ்மார்ட் ஃபோன்களை இருவரும் திருடி செல்ல முயற்சித்துள்ளனர் அப்போது இதை கவனித்த ஜம்புலிங்கம் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் இருவரையும் கையும் காளவுமாக பிடித்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.