திருச்சி மாவட்டம், வையம்பட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட 17 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் வழக்கில், தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாட்டைச் சோ்ந்த எழிலன் (24) என்பவருக்கு திருச்சி மகிளா நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 7,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தது. சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில், வையம்பட்டி போலீஸாா் போக்ஸோ சட்டப்பிரிவுகளின் கீழ் எழிலனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.