திருச்சி மன்னார்புரம் வடக்கு தெருவைச் சேர்ந்த சியாமளா தேவி (62) கடந்த 30 ஆம் தேதி வீட்டில் சாமி கும்பிடும் போது விளக்கேற்றும் போது நைட்டியில் தீப்பிடித்து உடல் முழுவதும் பரவி பலத்த காயமடைந்தார். உடனடியாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கண்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.