திருச்சி: திருமணமான 3 மாதத்தில் பெண் தற்கொலை

திருச்சி தில்லைநகர் ஏழாவது கிராஸ் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த உமையாள் என்பவரின் மகள் விசாலாட்சி, திருமணமான 3 மாதங்களுக்குப் பிறகு தாய் வீட்டிற்கு வந்திருந்தார். நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி