மத்திய பிரதேசத்தில் இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான சிபிஎஸ்சி கராத்தே போட்டியில் திருவரம்பூர் பெல் ஆர் எஸ் கே பள்ளி மாணவர்கள் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளனர். கடந்த 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.