திருச்சி: ஒலிப்பெருக்கிகளை பறிமுதல் செய்யக் கோரிக்கை

அதிக ஒலி மாசு ஏற்படுத்தும் கூம்பு வடிவ ஒலிப் பெருக்கியைப் பயன்படுத்த தடை அமலில் இருக்கும் நிலையில், சமயபுரத்துக்கு திங்கள்கிழமை வந்த ஒரு மினி வேனில் 32 சவுண்ட் பாக்ஸ், 6 கூம்பு ஸ்பீக்கா்கள் என 38 ஒலிப்பெருக்கிகள் கட்டிக் கொண்டு பாதயாத்திரை வருவோா் வந்தனா். அவா்களால் ஏற்பட்ட இரைச்சலால் அப்பகுதியில் கடை வைத்திருப்பவா்கள் பேசவது கூட பிறா் கேட்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே அளவுக்கு அதிகமாக ஒலிப் பெருக்கிகளைக் கட்டிக் கொண்டு வரும் வாகனங்களின் அனுமதியை ரத்து செய்து ஒலிப் பெருக்கிகளைப் பறிமுதல் செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.

தொடர்புடைய செய்தி