திருச்சி காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

திருச்சி மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இதில், மர்ம நபர்கள் 'டிஜிட்டல் அரெஸ்ட்' என்ற பெயரில் மக்களை அச்சுறுத்தி பணம் பறிக்கும் புதிய மோசடியில் ஈடுபட்டு வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. படித்தவர்கள், முதியவர்கள் என பலரும் இந்த மோசடியில் சிக்கி பணத்தை இழந்து வருவதாகவும், எந்த அரசு அமைப்பும், சிபிஐ அல்லது காவல்துறையும் ஒருபோதும் வீடியோ கால் மூலம் யாரையும் கைது செய்ய மாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி