திருச்சி: மெத்தபெட்டமைன் போதைப்பொருள் பறிமுதல்; இருவர் கைது

திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூர் செல்லும் விமானத்தில் போதைப்பொருள் கடத்தல் நடைபெறுவதாக கிடைத்த தகவலின் பேரில் வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பயணிகளை சோதனை இட்டனர். அப்போது ராமநாதபுரத்தைச் சேர்ந்த இரண்டு பயணிகள் தங்களது உடைமைகளில் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூ.15 கோடி மதிப்பிலான மெத்தபெட்டமைன் போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி