திருச்சி அல்லித்துறை அதவத்தூர் பகுதியைச் சேர்ந்த சசிகுமார், கடந்த 13ஆம் தேதி இருசக்கர வாகனத்தில் பள்ளக்காடு பகுதியில் சென்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று (மே 18) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சோமரசம்பேட்டை போலீசார் அவரது உடலை பிரேதப் பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.