திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வல்வேல்புதூர் பகுதியைச் சேர்ந்த கணேசன், மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர். நேற்று முன்தினம் மது அருந்த பணம் கேட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். மனைவி பணம் தர மறுத்ததால் மனமுடைந்த அவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை மீட்ட காட்டுப்புத்தூர் போலீசார், பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.