திருச்சி: காலமுறை ஊதியம் வழங்க கௌரவ விரிவுரையாளர்கள் கோரிக்கை

தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் நந்தகுமார், தங்கராஜ், சம்பத்குமார் ஆகியோர், பணிப்பாதுகாப்புடன் கூடிய 12 மாதமும் யுஜிசி முறைப்படி காலமுறை ஊதியம் வழங்கி பணிவரன்முறைக்கு உட்படுத்தி நிரந்தரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, கல்லூரிக்கல்வி ஆணையர், உயர் கல்வித்துறை செயலர், உயர்கல்வி துறை அமைச்சர், முதலமைச்சர் தனிப்பிரிவு செயலர் மற்றும் நிதித்துறை செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை மனுவை அளித்துள்ளனர். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி