திருச்சி விவசாய சங்கத்தினர் பிச்சை எடுக்கும் போராட்டம்

கூட்டுறவு சங்கங்களில் 5 ஏக்கர் வரை வைத்துள்ள விவசாயிகள் பெற்ற கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பின், 50 ஆயிரம் வரை கடன் பெற்ற விவசாயிகளின் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்யப்படும் என முதலமைச்சர் அறிவித்ததற்கு கண்டனம் தெரிவித்து, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி