திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமீபத்திய சட்டமன்ற தேர்தல் மற்றும் ஆட்சி மாற்றத்தால் திருச்சி மாநகராட்சியில் நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு மற்றும் மக்கள் நலத் திட்டங்களில் எந்தவித தொய்வும் ஏற்படாது என தெரிவித்துள்ளார். அனைத்து பணிகளும் குறிப்பிட்ட கால அட்டவணைப்படி நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.