திருச்சி: எம்எல்ஏ பழனியாண்டி இல்ல திருமண விழாவில் முதல்வர்

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பழனியாண்டி மகன் விஜயபாரதிக்கும் திருச்சியை சேர்ந்த மனிஷா என்பவருக்கும் திருமணம் திருச்சி சோமரசம்பேட்டை அருகே நடைபெற்றது. இந்த திருமணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்கள் விஜயபாரதி - மனிஷாவை வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே. என். நேரு, ரகுபதி, கீதா ஜீவன், அன்பில் மகேஷ், சிவசங்கர், மெய்யநாதன், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், திமுகவினர் என பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி