திருச்சி: பாம்பு கடித்து சிறுவன் பலி

மணப்பாறையை அடுத்த பண்ணப்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டியைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவரின் 7 வயது மகன் அபினேஷ், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது பாம்பு கடித்துள்ளது. குடும்பத்தினர் அவனை மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு முதலுதவிக்குப் பிறகு திருச்சி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பப்பட்ட நிலையில், வழியிலேயே அபினேஷ் உயிரிழந்தான். புத்தாநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி