திருச்சி: சாராய ஊறல் அழிப்பு

துறையூர் மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், வையம்பட்டியை அடுத்த வீரமலைப்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் தோட்டத்தில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு சாராயம் காய்ச்சுவதற்காக வைக்கப்பட்டிருந்த 20 லிட்டர் ஊறல் கண்டெடுக்கப்பட்டு அழிக்கப்பட்டது. இது தொடர்பாக பூசாரிபட்டியைச் சேர்ந்த பாண்டியன் (48) என்பவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி