திருச்சி: குட்கா , புகையிலை விற்ற வியாபாரி உள்பட 2 பேர் கைது

திருச்சி கிராப்பட்டி பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை நடந்ததாக கிடைத்த தகவலின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் சோதனை நடத்தினார். இதில் 5.394 கிலோ ஹான்ஸ், கூலிப் புகையிலை பொருட்கள் கண்டறியப்பட்டு, அவை கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக எடமலைப்பட்டி புதூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து பெட்டிக்கடை உரிமையாளர் முனுசாமி (59) என்பவரை கைது செய்தனர். இதேபோல், பாலக்கரை துரைசாமிபுரத்தில் ஹான்ஸ் புகையிலை பதுக்கி வைத்திருந்த கரீம் (19) என்ற வாலிபரையும் போலீசார் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி