திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ, தவெக தலைவர் விஜய்க்கு 15 சதவீத வாக்குகள் இருப்பதாகவும், அது வெற்றிக்கு வழிவகுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் கூறினார். மேலும், இந்த தேர்தல் திமுக கூட்டணிக்கும் அதிமுக கூட்டணிக்கும் இடையேதான் போட்டியாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.