திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 35-வது நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. திருச்சி வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சரவணன் தலைமையில், ராஜீவ் காந்தியின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தொட்டியம் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் சாமி மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, காங்கிரஸ் கட்சியினர் பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்றனர்.