மணப்பாறை அருகே உள்ள பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். நேற்று முன்தினம் இரவு கதவை திறந்து வைத்துவிட்டு குடும்பத்தினருடன் உறங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 3 மணி அளவில் சத்தம் கேட்டு எழுந்திருந்தபோது அவரது வீட்டில் பொருட்களை திருடி விட்டு மூன்று நபர்கள் பைக்கில் தப்பிச் சென்றதைக் கண்டார். அவருடைய மகன் கழுத்தில் அணிந்திருந்த ஒன்றரை கிராம் தங்க தாயத்து இரண்டு மொபைல் போன்கள் 5000 ரூபாய் ரொக்கம் திருடு போனது தெரிய வந்தது. இது குறித்து வளநாடு காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டதில் அவரது வீட்டில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சிவகங்கை மாவட்டம் திருமலைக்குடியைச் சேர்ந்த அர்ஜுனன் சந்துரு மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.