திருவெறும்பூர் சோழிய வேளாளர் சங்கம் அன்பில் மகேஷ்க்கு ஆதரவு

திருச்சி: தமிழ்நாடு மாநில சோழிய வெள்ளாளர் சங்கத்தின் நிர்வாகிகள், திருவெறும்பூர் தொகுதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் அமைச்சர் முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களை நேரில் சந்தித்து தங்களது முழு ஆதரவை தெரிவித்தனர். மாநிலத் தலைவர் டாக்டர் செந்தில் பிள்ளை தலைமையில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில், எல்லக்குடி வட்டாரக் கிளைச்சங்க நிர்வாகிகள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர். இந்த ஆதரவு, அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு மேலும் வலு சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி