திருவெரம்பூர்: கத்தியை காட்டி பணம் பறித்த நான்கு பேர் கைது

திருச்சி திருவெரம்பூர் அருகே உள்ள அய்யம்பட்டி சேர்ந்தவர் ஆனந்த். இவர் தனது இருசக்கர வாகனத்தில் தொண்டைமான்பட்டி சுரங்கப்பாதை அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நான்கு மர்ம நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி சட்டை பையில் வைத்திருந்த 1000 ரூபாய் ரொக்கம் மொபைல் போனை பறித்துச் சென்றனர்.

இது குறித்து ஆனந்த் திருவரம்பூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர் இதை தொடர்ந்து அவரிடம் பணப்பரிப்பில் ஈடுபட்ட துவாக்குடியைச் சேர்ந்த மனோஜ் ராஜபாண்டி பகத்சிங் திருவரம்பூரைச் சேர்ந்த விஜயகுமார் ஆகிய நால்வரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்தி